கெஜ்ரிவால் கைதை விமர்சித்த விவகாரம்: அமெரிக்க தூதரை அழைத்து இந்தியா கண்டனம்


கெஜ்ரிவால் கைதை விமர்சித்த விவகாரம்: அமெரிக்க தூதரை அழைத்து இந்தியா கண்டனம்
x

டெல்லியில் உள்ள பொறுப்பு துணை தூதரை சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனத்தை தெரிவித்தது.

புதுடெல்லி,

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு உள்ளார். இதை அமெரிக்கா விமர்சித்து இருந்தது. கெஜ்ரிவாலுக்கு நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்ட நடவடிக்கை கிடைப்பதை அமெரிக்கா ஊக்குவிக்கும் என அந்த நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

அமெரிக்காவின் இந்த விமர்சனம் மத்திய அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதை அமெரிக்க தூதரிடம் நேற்று நேரில் பதிவு செய்துள்ளது.

அதன்படி டெல்லியில் உள்ள பொறுப்பு துணை தூதர் குளோரியா பெர்பெனாவை சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த கண்டனத்தை தெரிவித்தது.

முன்னதாக கெஜ்ரிவால் கைதை விமர்சித்த ஜெர்மனிக்கும் இந்தியா கண்டனம் தெரிவித்ததுடன், அந்த நாட்டு தூதரையும் நேரில் அழைத்து கண்டனத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story