இந்தியாவில் முதல் முறையாக 'மோட்டோஜிபி' உலக சாம்பியன்ஷிப் பைக் பந்தய போட்டி


இந்தியாவில் முதல் முறையாக மோட்டோஜிபி உலக சாம்பியன்ஷிப் பைக் பந்தய போட்டி
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 21 Sep 2022 10:44 AM GMT (Updated: 21 Sep 2022 2:04 PM GMT)

இந்தியாவில் முதல் முறையாக 'மோட்டோஜிபி' உலக சாம்பியன்ஷிப் பைக் பந்தய போட்டி நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

'கிராண்ட் பிரிக்ஸ்' மோட்டார் சைக்கில் ரேசிங் எனப்படும் மோட்டோஜிபி பைக் பந்தயம் போட்டி சர்வதேச அளவில் பிரபலம் ஆகும்.

இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான மோட்டோஜிபி உலக சாம்பியன்ஷிப் பைக் பந்தய போட்டியை நடத்தும் வாய்ப்பை முதல் முறையாக இந்தியா பெற்றுள்ளது.

2023-ம் ஆண்டுக்கான மோட்டோஜிபி உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் 'கிராண்ட் பிரிக்ஸ் ஆப் பாரத்' என்ற பெயரில் நடத்தப்பட உள்ளது. 2022 மோட்டோ ஜிபி உலக சாம்பியன்ஷிப் தொடருக்கான பந்தயங்கள் நொய்டா நகரில் உள்ள புத்தா சர்வதேச சர்க்கியூட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 19 நாடுகளை சேர்ந்த பைக் ரேஸ் பந்தய வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

'மோட்டோஜிபி' உலக சாம்பியன்ஷிப் பைக் பந்தய போட்டிகள் அடுத்த ஆண்டு முதல் முறையாக இந்தியாவில் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Next Story