'அடுத்த இரண்டரை ஆண்டுகளில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும்' - பியூஷ் கோயல்


அடுத்த இரண்டரை ஆண்டுகளில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் - பியூஷ் கோயல்
x

இந்தியாவின் பொருளாதாரம் சர்வதேச அளவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது என மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.

புதுடெல்லி,

அடுத்த இரண்டரை ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றமடையும் என மத்திய மந்திரி பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது;-

"2027-ம் ஆண்டு இந்தியா உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக உயரும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். அதிலும் குறிப்பாக, அடுத்த இரண்டரை ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றமடையும். இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக விளங்கும்.

இந்தியாவின் பொருளாதாரம் சர்வதேச அளவில், குறைந்த பணவீக்கம் மற்றும் அதிக வளர்ச்சி விகிதத்தோடு மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக திகழ்கிறது."

இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.


Next Story