கூட்டு ராணுவப்பயிற்சியில் பங்கேற்க இந்தியக்குழு ஆஸ்திரேலியா புறப்பட்டது - பாதுகாப்பு அமைச்சகம் தகவல்


கூட்டு ராணுவப்பயிற்சியில் பங்கேற்க இந்தியக்குழு ஆஸ்திரேலியா புறப்பட்டது - பாதுகாப்பு அமைச்சகம் தகவல்
x

ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நவம்பர் 22-ந்தேதி முதல் டிசம்பர் 6-நதேதி வரை கூட்டு ராணுவப்பயிற்சி நடத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கூட்டு ராணுவப்பயிற்சியான ஆஸ்ட்ராஹிண்டின் 2-வது பயிற்சியில் பங்கேற்பதற்காக 81 வீரர்களைக்கொண்ட இந்திய ஆயுத படைக்குழு நேற்று ஆஸ்திரேலியா புறப்பட்டுச்சென்றதாக பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நவம்பர் 22-ந்தேதி முதல் டிசம்பர் 6-ந்தேதி வரை இந்தப்பயிற்சி நடத்தப்படும். ஆஸ்ட்ராஹிண்ட் பயிற்சி 2022-ல் ஆரம்பிக்கப்பட்டது. முதல் பயிற்சி ராஜஸ்தானில் நடத்தப்பட்டது.

இது இந்தியாவிலும், ஆஸ்திரேலியாவிலும் மாறி மாறி நடத்தப்படும் வருடாந்திர பயிற்சி நிகழ்வாக திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டுறவை வளர்ப்பதும், இரு தரப்புக்கும் இடையே சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதும் இந்தப்பயிற்சியின் நோக்கமாகும்.

அதன் பயிற்சி பாடத்திட்டத்தில் துப்பாக்கிச்சூடு, கூட்டாக செயல்படும் கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே புரிந்துணர்வை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் இந்தப் பயிற்சி உதவும்.


Next Story