'ஐ.என்.எஸ். சந்தாயக்' ஆய்வுக் கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு


ஐ.என்.எஸ். சந்தாயக் ஆய்வுக் கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு
x

Image Courtesy : @rajnathsingh

தினத்தந்தி 4 Feb 2024 11:45 AM IST (Updated: 4 Feb 2024 11:50 AM IST)
t-max-icont-min-icon

மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் முன்னிலையில் 'ஐ.என்.எஸ். சந்தாயக்' கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

விசாகப்பட்டினம்,

கொல்கத்தாவைச் சேர்ந்த 'கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் என்ஜினீயர்ஸ்' நிறுவனம் 4 மிகப்பெரிய ஆய்வுக் கப்பல்களை உருவாக்கி வருகிறது. இதில் முதல் கப்பலான 'ஐ.என்.எஸ். சந்தாயக்' கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி இந்திய கடற்படையிடம் வழங்கப்பட்டது. இந்த கப்பல், துறைமுகம் மற்றும் கடலில் விரிவாக சோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் முன்னிலையில் 'ஐ.என்.எஸ். சந்தாயக்' கப்பல் இந்திய கடற்படையில் நேற்று முறைப்படி இணைக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நடைபெற்ற இந்த விழாவில், கடற்படை தளபதி ஆர்.ஹரிகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


Next Story