"இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளது" - மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்


இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளது - மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
x

கொரோனாவிற்கு பிறகு உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் இதற்கு முந்தைய காலங்களில் இருந்த ஆட்சியை விட, பிரதமர் மோடியின் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கொரோனாவிற்கு பிறகு, சர்வதேச அளவில் உலகின் பல நாடுகளின் வளர்ச்சி குறைந்து வருவதாகவும் மந்தமாக இருப்பதாகவும், ஆனால் இந்தியாவின் வளர்ச்சி 8% வரை இருக்கும் என்று ஐ.எம்.எஃப், கணித்துள்ளது என்றும் அவர் கூறினார். உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரம் இந்தியாவுடையது தான் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


Next Story