மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்டா காதலன்... உடந்தையாய் இருந்த தோழிகள்..!


மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்டா காதலன்... உடந்தையாய் இருந்த தோழிகள்..!
x

விடுதியில் அடைத்து வைத்து அஜின் சாம் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

எர்ணாகுளம்

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் அஜின் சாம். இவருக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக களியக்காவிளை பகுதியைச் சார்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் நெருக்கமாக பழகி உள்ளார். மேலும் அந்தப் பெண்ணை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்ததோடு, கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி களியக்காவிளை பகுதிக்கு வந்த அஜின் சாம் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது தனது நண்பர்களுடன் சேர்ந்து நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் விடுதியில் அடைத்து வைத்து அஜின் சாம் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 18ம் தேதி அந்த பெண்ணை அவரது வீட்டின் அருகே இறக்கி விட்டு விட்டு இவர் சென்றுள்ளார். அதற்குப் பின்னர் இந்த நபரிடமிருந்து எந்த செல்போன் அழைப்புகளும் வராததை தொடர்ந்து சந்தேகமடைந்த மாணவி தனது குடும்பத்தினரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து கூறியுள்ளார். அதைக் கேட்ட வீட்டார் பாறசாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் எர்ணாகுளம் காலடி பகுதியை சேர்ந்த அஜின் சாம் மற்றும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும் நேரத்தில் அவருடன் வந்த அவரது நண்பர்களான அகிலேஷ் பாபு, ஜிதின் வர்கீஸ், பூர்ணிமா, தினேஷ், ஸ்ருதி, சித்தார்த் ஆகியோரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


Next Story