கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின வாலிபரை மிரட்டிய விவகாரம்: தமிழக அரசுக்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்


கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின வாலிபரை மிரட்டிய விவகாரம்: தமிழக அரசுக்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்
x

சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் தானாக முன்வந்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

சேலம் மாவட்டம் திருமலைகிரியில் மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின வாலிபரை தி.மு.க. நிர்வாகி மாணிக்கம் மிரட்டினார். இதுகுறித்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் போலீசார் மாணிக்கத்தை கைது செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் தானாக முன்வந்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமை செயலாளர், டி.ஜி.பி., சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சேலம் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தவறும் பட்சத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story