டெல்லியில் ஐ.எஸ். பயங்கரவாதி கைது: என்.ஐ.ஏ.வால் தேடப்பட்டவர்


டெல்லியில் ஐ.எஸ். பயங்கரவாதி கைது: என்.ஐ.ஏ.வால் தேடப்பட்டவர்
x

டெல்லியில் ஐ.எஸ். பயங்கரவாதி கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியை சேர்ந்த ஷானவாஸ் என்பவர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக வழக்குகளில் சிக்கி இருந்தார். இவர் பிரபல பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் புனே போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தார். ஆனால் அவர்களின் காவலில் இருந்து தப்பி வந்த இவர் டெல்லியிலேயே தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இவரை தேசிய புலனாய்வுப்பிரிவு (என்.ஐ.ஏ.) போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவரை பற்றிய துப்பு கொடுப்போருக்கு ரூ.3 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இவ்வாறு தீவிரமாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஷானவாஸ் நேற்று டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் டெல்லி போலீசின் சிறப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.

டெல்லியில் ஐ.எஸ். பயங்கரவாதி கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story