காருக்கு வழிவிடாதவர் உயிரை விட்ட பரிதாபம்: அடித்துக்கொன்றதாக 2 வாலிபர்கள் கைது


காருக்கு வழிவிடாதவர் உயிரை விட்ட பரிதாபம்: அடித்துக்கொன்றதாக 2 வாலிபர்கள் கைது
x

கோப்புப்படம் 

காருக்கு வழிவிடாதவர், வாலிபர்களால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி,

மத்திய டெல்லியில் உள்ள ராஜேந்திரநகரில் பங்கஜ் தாக்குர் (வயது39) என்ற டெலிவரிமேன் நேற்று தனது மோட்டார் சைக்கிளை ரோட்டில் நிறுத்தியுள்ளார். அப்போது அந்த வழியாக காரில் வந்த 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை எடுக்கச்சொல்லியுள்ளனர்.

ஆனால் பங்கஜ் தாக்குர் அதை எடுப்பதில் காலம் தாழ்த்தியதாகத்தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் காரில் இருந்து இறங்கி பங்கஜ் தாக்குரை சரமாரியாக தாக்கினர்.

இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இந்த சம்பவம் பற்றி தகவல் தெரிந்த போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கண்காணிப்பு கேமரா பதிவுகள் உதவியுடன் மனிஷ்குமார் (19), லால்சந்த் (20) ஆகிய 2 பேரை கைதுசெய்தனர். காருக்கு வழிவிடாதவர், வாலிபர்களால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story