வாக்களிப்பதை கட்டாயமாக்குவது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை - மத்திய அரசு விளக்கத்தால் தனிநபர் மசோதா வாபஸ்


வாக்களிப்பதை கட்டாயமாக்குவது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை - மத்திய அரசு விளக்கத்தால் தனிநபர் மசோதா வாபஸ்
x

தேர்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்க கோரும் தனிநபர் மசோதாவை பா.ஜனதா எம்.பி. ஜனார்தன் சிங் சிக்ரிவால் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்தார்.

புதுடெல்லி,

தேர்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்க கோரும் தனிநபர் மசோதாவை பா.ஜனதா எம்.பி. ஜனார்தன் சிங் சிக்ரிவால் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்தார். 3 ஆண்டுகளாக இம்மசோதா நிலுவையில் உள்ளது. அவ்வப்போது விவாதத்துக்கு வரும்போது, மசோதாவுக்கு ஆதரவாக சில எம்.பி.க்களும், எதிராக சில எம்.பி.க்களும் பேசி வருகின்றனர். இந்நிலையில், நேற்று இந்த மசோதா விவாதத்துக்கு வந்தது. அப்போது, மத்திய சட்டத்துறை இணை மந்திரி எஸ்.பி.சிங் பாகல் கூறியதாவது:-

வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்ற உறுப்பினர்களின் உணர்வுகளுடன் நான் உடன்படுகிறேன். ஆனால், வாக்களிக்காத மக்களை தண்டிப்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது. வாக்களிக்காதவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது. அப்படி வெளியிடுவது ஜனநாயக உணர்வுக்கு எதிரானது. வாக்களிப்பது உரிமைதான். ஆனால் கட்டாய கடமை அல்ல. சட்ட ஆணையமும் கட்டாயமாக்குவதை ஆதரிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். அதையடுத்து, அந்த தனிநபர் மசோதாவை ஜனார்தன் சிங் சிக்ரிவால் வாபஸ் பெற்றார்.


Next Story