குஜராத் மோர்பி பாலம் விபத்துக்கு யாரும் மன்னிப்பு கேட்காதது அதிர்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்


குஜராத் மோர்பி பாலம் விபத்துக்கு யாரும் மன்னிப்பு கேட்காதது அதிர்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்
x

மோர்பி தொங்கு பாலம் விபத்து குஜராத்தின் நியாயமான பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது

புதுடெல்லி,

குஜராத் மாநிலத்தில் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 135 பேர் பலியானார்கள். இச்சம்பவம் தொடர்பாக குஜராத் மாநில அரசு மற்றும் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன.

இந்த நிலையில் மோர்பி பாலம் விபத்து தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் கூறியதாவது:-

மோர்பி தொங்கு பாலம் விபத்து குஜராத்தின் நியாயமான பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது... இந்த துயரச் சம்பவத்திற்கு அரசு சார்பில் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை என்பதுதான் மிகவும் அதிர்ச்சியளிக்கும் நிகழ்வு. பொறுப்பேற்று யாரும் ராஜினாமா செய்யவில்லை.என தெரிவித்துள்ளார்.


Next Story