ஜம்மு காஷ்மீர்: என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீர்:  என்கவுன்டரில்  பயங்கரவாதி சுட்டுக்கொலை
x

ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இன்று அதிகாலை ராணுவப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதிகாலை 2.15 மணியளவில் பாகிஸ்தானை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர்.

இதையடுத்து ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.அவரது உடல் துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. மற்ற 2 பேரும் காட்டுப்பகுதியில் தப்பி ஓடி விட்டனர். அவர்களை கைது செய்யும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.


Next Story