ஜார்க்கண்ட்: பள்ளி மாணவனை அடித்துக் கொன்ற சக மாணவர்கள் - 6 நாட்களுக்குப் பிறகு உடல் கண்டெடுப்பு


ஜார்க்கண்ட்: பள்ளி மாணவனை அடித்துக் கொன்ற சக மாணவர்கள் - 6 நாட்களுக்குப் பிறகு உடல் கண்டெடுப்பு
x

விசாரணையை திசைதிருப்ப உயிரிழந்த மாணவரின் உடலை கிணற்றில் வீசியுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர், கடந்த 6-ந்தேதி தனது சக மாணவர்களுடன் வெளியே சென்றுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பாத நிலையில், அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், 6 நாட்களுக்குப் பிறகு மாணவரின் உடல் அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, உயிரிழந்த மாணவரின் வகுப்பில் படித்து வரும் சக மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாகவும், விசாரணையை திசைதிருப்ப உயிரிழந்த மாணவரின் உடலை கிணற்றில் வீசியுள்ளனர் எனவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற மாணவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story