ஜம்மு காஷ்மீர்: நெடுஞ்சாலையில் வெடி குண்டு கண்டெடுப்பு


ஜம்மு காஷ்மீர்: நெடுஞ்சாலையில் வெடி குண்டு கண்டெடுப்பு
x

அமர்யாத் யாத்திரை தொடங்க சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் நெடுஞ்சாலையோரம் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர்-பாரமுல்லா நெடுஞ்சாலையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகப் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர். நெடுஞ்சாலையின் சங்கிராமா பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மேலும், சங்கிராமாவின் புட்கா பகுதியில், வெடிகுண்டு நிபுணர்கள், வெடிகுண்டை செயலிழக்கச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த 5 துப்பாக்கிகள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். உரிய நேரத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால், அங்கு நிகழவிருந்த பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


Next Story