வேலைவாய்ப்பின்மை, ஊழல், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை: மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த பாஜக திட்டம்


வேலைவாய்ப்பின்மை, ஊழல், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை: மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த பாஜக திட்டம்
x

வேலைவாய்ப்பின்மை, ஊழல், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோட்சா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்மந்திரியாக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு எதிராக வரும் 11-ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. மாநிலத்தில் நிலவி வரும் வேலைவாய்ப்பின்மை, ஊழல், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த ஜார்க்கண்ட் பாஜக அறிவித்துள்ளது.


Next Story