கர்நாடகா: கால்வாயில் கார் கவிழ்ந்து 4 பெண்கள் உயிரிழப்பு


கர்நாடகா: கால்வாயில் கார் கவிழ்ந்து 4 பெண்கள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 30 July 2023 3:45 PM IST (Updated: 30 July 2023 4:17 PM IST)
t-max-icont-min-icon

விஸ்வேஸ்வரய்யா கால்வாயில் கார் கவிழ்ந்ததில் நான்கு பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

பெங்களூர்,

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள விஸ்வேஸ்வரய்யா கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் நான்கு பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.காமனஹள்ளியில் இருந்து தொட்டமுல்கூடு நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. கார் வளைவில் திரும்பும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக விஸ்வேஸ்வரய்யா கால்வாயில் விழுந்துள்ளது. இதில் காரில் பயணித்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கி காரில் பயணித்த மகாதேவம்மா (வயது 55), அவரது உறவினர்களான சஞ்சனா (வயது 17), மம்தா (வயது 45) மற்றும் ரேகா (வயது 36) ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

காரை ஓட்டி வந்த மனோஜ் மட்டும் நீந்தி கரையேறி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மனோஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அரகெரே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story