கர்நாடகா: 20 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த ஜீப்... 7 பேர் உயிரிழப்பு..!


கர்நாடகா: 20 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த ஜீப்... 7 பேர் உயிரிழப்பு..!
x

கர்நாடகாவில் சுற்றுலா சென்ற ஜீப், 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெலகாவி நகருக்கு சுற்றுலாவுக்காக 11 பேர் கொண்ட குழுவினர் ஜீப்பில் வந்துள்ளனர். ஜீப் கல்யாழா பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப்பானது 20 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழதது.

இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் இருவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தன்ர்.

ஓட்டுநர் ஜீப்பை அதிவேகமாக ஓட்டியதன் காரணமாக ஜீப் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக பள்ளத்திற்குள் விழுந்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஓட்டுநர் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கினாரா, அல்லது விபத்திற்கு வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து 7 பேர் உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story