கர்நாடக சட்டசபை தேர்தல்; 1 ரூபாய் நாணயங்களாக சேகரித்து டெபாசிட் பணம் கட்டிய சுயேச்சை வேட்பாளர்


கர்நாடக சட்டசபை தேர்தல்; 1 ரூபாய் நாணயங்களாக சேகரித்து டெபாசிட் பணம் கட்டிய சுயேச்சை வேட்பாளர்
x
தினத்தந்தி 19 April 2023 8:40 AM GMT (Updated: 19 April 2023 12:20 PM GMT)

கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்காளர்களிடம் சேகரித்த 1 ரூபாய் நாணயங்களை கொண்டு சுயேச்சை வேட்பாளர் டெபாசிட் பணம் கட்டியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே 10-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், யாதகீர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரான யாங்கப்பா என்பவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக இன்று சென்று உள்ளார்.

அவர் வாக்காளர்களிடம் இருந்து 1 ரூபாய் நாணயங்களாக சேகரித்து ரூ.10 ஆயிரம் திரட்டி உள்ளார். அதனை கொண்டு டெபாசிட் பணம் ஆக கட்டியுள்ளார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய யாங்கப்பா, எனது வாழ்வை என்னுடைய சமூகத்தினருக்கும், கிராமவாசிகளுக்கும் அர்ப்பணிப்பேன். சுவாமி விவேகானந்தரின் கொள்கைகள் எழுதப்பட்ட போஸ்டர்களுடன் வந்து, தேர்தல் அதிகாரியை சந்தித்தேன் என கூறியுள்ளார்.


Next Story