ஆபாச வீடியோ வழக்கு: முன்னாள் மந்திரி மீதான விசாரணை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைப்பு - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


ஆபாச வீடியோ வழக்கு: முன்னாள் மந்திரி மீதான விசாரணை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைப்பு - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x

ஆபாச வீடியோ வழக்கில் முன்னாள் மந்திரி மீதான விசாரணை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைத்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிடடுள்ளது.

பெங்களூரு:

பா.ஜனதா முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த சிறப்பு விசாரணை குழு போலீசார், ரமேஷ் ஜார்கிகோளி குற்றமற்றவர் எனக்கூறி பெங்களூரு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பாதிக்கப்பட்ட இளம்பெண் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆபாச வீடியோ வழக்கில் சிறப்பு விசாரணை குழு போலீஸ் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், சி.பி.ஐ. விசாரிக்க அனுமதி வழங்கும்படியும் கர்நாடக ஐகோர்ட்டில் ஏற்கனவே இளம்பெண் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான ஐகோர்ட்டு நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது இளம்பெண் சார்பில் வக்கீல் இந்திரா ஜெய்சிங் ஆஜராகி வாதிட்டார். அப்போது ரமேஷ் ஜார்கிகோளி கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நரேஷ் கவுடா, சரவனுக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளது. இந்த வழக்கில் சிறப்பு விசாரணை குழு போலீசார் ரமேஷ் ஜார்கிகோளி குற்றமற்றவர் என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் ரமேஷ் ஜார்கிகோளிக்கு ஆதரவாக சிறப்பு விசாரணை குழு போலீசார் செயல்பட்டுள்ளனர் என்றார். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story