தென்மேற்கு பருவமழை காரணமாக விறுவிறுவென உயரும் கர்நாடக அணைகள்


தென்மேற்கு பருவமழை காரணமாக விறுவிறுவென உயரும் கர்நாடக அணைகள்
x

அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ள சூழலில் நீர் வெளியேற்றமும் அதிகரித்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில் கடந்த இரு தினங்களாக தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக காவிரி நீர்பிடிப்பு மாவட்டங்களான குடகு, சிக்க மங்களூரு, ஹாசன் சாம்ராஜ் நகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

இதனால், அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ள சூழலில் நீர் வெளியேற்றமும் அதிகரித்துள்ளது. குடகு மாவட்டத்தில் உள்ள ஹாரங்கி அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, நீர் வெளியேற்றம் அதிகப்படுத்தியுள்ளதால், கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் நிலவுவதால், தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மறுபுறம் கனமழை காரணமாக ஆங்காங்கே மரங்கள், மின் கம்பங்கள் விழுந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story