கர்நாடகத்தின் 3-வது முதல்-மந்திரி கடிதால் மஞ்சப்பா


கர்நாடகத்தின் 3-வது முதல்-மந்திரி கடிதால் மஞ்சப்பா
x

கர்நாடகத்தின் 3-வது முதல்-மந்திரி கடிதால் மஞ்சப்பா குறித்து தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பெங்களூரு:

கர்நாடகத்தின் 3-வது முதல்-மந்திரி என்ற பெருமைக்குரியவர் கடிதால் மஞ்சப்பா ஆவார். இவர் கர்நாடக சட்டசபையில் கடந்த 1956-ம் ஆண்டு ஆகஸ்டு 19-ந் தேதி முதல் 1956-ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி வரை முதல்-மந்திரியாக பதவி வகித்தார். சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா கடிதால் கிராமத்தில் கடந்த 1908-ம் ஆண்டு இவர் பிறந்தார். மைசூருவில் கல்லூரி வாழ்க்கையை முடித்த இவர் புனேவில் உள்ள சட்டகல்லூரியில் சட்டம் பயின்றார். சுதந்திர போராட்ட வீரரும், காந்தியவாதியுமான இவர் அரசியல் பொது வாழ்வில் பல்வேறு இன்னல்களை சந்தித்தார்.

அந்த நேர்மைக்கு கிடைத்த பரிசாக தனது 32 வயதுக்குள்ளாக மத்திய, மாநில அரசுகளில் பல்வேறு பதவிகள் வகித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் விவசாயிகளை காக்கும் நோக்கில் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற கருத்தை மையமாக கொண்டு நிலச்சுவான்தார் முறைக்கு எதிராக மாநிலத்தில் கடந்த 1950-ம் ஆண்டு இவர் சட்டம் இயற்றினார். இதேபோல் மாநிலத்தை ஆண்ட குறுநில மன்னர்களுக்கு அரசு மானியம் கொடுக்கும் நடைமுறையை ரத்து செய்தது இவரது காலகட்டத்தில் தான்.

மேலும் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அவசர நிலை பிரகடனத்துக்கு எதிராக இவர் போராடி உள்ளார். இதேபோல் 3 நாவல்களை எழுதி உள்ள இவர், 'நனசங்டா கனசு' என்ற பெயரில் தனது சுயசரிதையை வெளியிட்டார். அந்த காலக்கட்டத்தில் மாநிலத்தை குறைந்த நாட்கள் ஆட்சி செய்த முதன், முதல்-மந்திரி இவர் என்பது கூடுதல் தகவல்.


Next Story