அரசியல் ஒலி பெருக்கி


அரசியல் ஒலி பெருக்கி
x

கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து தலைவர்கள் தெரிவித்த கருத்துகளை இங்கு காணலாம்.

பெங்களூரு:

முதல்-மந்திரி, ரவுடி போல் பேசுகிறார்

தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜனதாவில் தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு தொகுதிகளிலும் போட்டி ஏற்பட்டுள்ளது. சீட் கிடைக்காதவர்கள் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு செல்வது வாடிக்கை தான். நந்தினி பாலுடன், குஜராத்தை சேர்ந்த அமுல் பாலையும் இணைக்க பா.ஜனதா அரசு முயற்சிக்கிறது. இதற்கு எதிராக கர்நாடகத்தில் அமுல் பாலுக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள். அமுல் பால் விவகாரத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஒரு ரவுடி போல் பேசுகிறார்.

- எச்.விஸ்வநாத், பா.ஜனதா எம்.எல்.சி.


விவசாயிகளை பாதுகாப்பதில் அரசு தோல்வி

கர்நாடகத்தில் விவசாயிகளை பாதுகாப்பதில் பா.ஜனதா அரசு தோல்வி அடைந்து விட்டது. பா.ஜனதா அரசில் கொண்டு வரப்பட்ட எந்த ஒரு திட்டமும் விவசாயிகளுக்கு சென்றடையவில்லை. மக்களுக்காக கொண்டு வரப்பட்ட பல திட்டங்களும் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, அந்த திட்டங்களை அரசு நிறுத்தி விட்டது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்காக திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தப்படும்.

- எம்.பி.பட்டீல், காங்கிரஸ் பிரசாரக்குழு தலைவர்.


ஹாசன் பிரச்சினையை மறைக்க அரசு மீது குற்றச்சாட்டு

ஹாசன் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் குமாரசாமி குடும்பத்தில் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த பிரச்சினையை மூடி மறைக்க நந்தினி-அமுல் பால் விவகாரத்தை கையில் எடுத்து அரசு மீது குமாரசாமி குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். மக்களின் கவனத்தை திசை திருப்ப கன்னடர்கள்-மார்வாடிகள் என்று சித்தராமையாவும், குமாரசாமியும் பேசி வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர்கள் பொறுப்பற்ற முறையில் பேசுவது சரியல்ல.

- அஸ்வத் நாராயண், உயர் கல்வித்துறை மந்திரி.


எனது மகனுக்கும் சீட் கொடுங்கள்

என்னுடைய மகனுக்கு துமகூரு மாவட்டம் குப்பி தொகுதியில் போட்டியிட சீட் கொடுக்கும்படி பா.ஜனதா மேலிட தலைவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இந்த விவகாரத்தில் கட்சி தலைவர்கள் என்ன முடிவு செய்வார்கள் என்று தெரியவில்லை. வேறு சில தலைவர்களின் மகன்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்தால், என்னுடைய மகனுக்கும் சீட் கொடுங்கள் என்று கூறியுள்ளேன். பா.ஜனதா தொண்டர்களின் அழுத்தம் காரணமாக தான் மகனுக்கு சீட் கேட்கிறேன்.

- சோமண்ணா,


Related Tags :
Next Story