கர்நாடக தேர்தல்: வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக புகார் - ரூ.1.5 கோடி பறிமுதல்


கர்நாடக தேர்தல்: வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக புகார் - ரூ.1.5 கோடி பறிமுதல்
x

உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.5 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பா.ஜ.க., காங்கிரஸ், ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ரொக்கமாக பணத்தை எடுத்துச் செல்பவர்கள், அதற்கான உரிய ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் ராம துர்கா பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில், தேர்தல் அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.5 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக துரனூர் அருகே வாக்காளர்களுக்கு சிலர் பணம் விநியோகம் செய்யும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.



Next Story