கணவர் சாக்லேட் வாங்கி வராததால் மனமுடைந்த மனைவி தற்கொலை - பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்


கணவர் சாக்லேட் வாங்கி வராததால் மனமுடைந்த மனைவி தற்கொலை - பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்
x

பெங்களூரில் கணவர் சாக்லேட் வாங்கி வராததால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரில் சாக்லேட் வாங்கி வராததால் கோபமடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹென்னூர் பந்தே அருகே உள்ள ஹொன்னப்பா லேஅவுட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சககாரநகரில் உள்ள சலூனில் பணிபுரியும் நபர் கவுதம். இவரது மனைவி நந்தினி (வயது 30). கல்லூரியில் இருந்தே ஒருவரையொருவர் அறிந்த தம்பதிகளான இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வியாழக்கிழமை கவுதம் வேலைக்குச் செல்லும்போது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

நந்தினி, கவுதமிடம் சாக்லேட் வாங்கி வர கூறியுள்ளார். சாக்லேட்டுடன் திரும்பி வருகிறேன் என்று கூறிவிட்டு சென்ற கவுதம், நந்தினியின் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை. இந்த நிலையில் இரவு 11.45 மணியளவில் நந்தினி அவருக்கு வாட்ஸ்அப் மூலம் 'நான் போகிறேன். சீக்கிரம் வீட்டுக்கு வந்து குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து விடுங்கள். அவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று மெசேஜ் அனுப்பியுள்ளார்.

இந்த மெசேஜை பார்த்ததும் பீதியடைந்த கவுதம், நந்தினிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. இதையடுத்து வீட்டிற்கு விரைந்து வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நந்தினி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.

நந்தினியின் குடும்பத்தார் கவுதம் மீது எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை.


Next Story