கர்நாடகா: கனமழையால் ஏற்பட்ட மண் சரிவு - 3 பேர் பரிதாப பலி...!


கர்நாடகா: கனமழையால் ஏற்பட்ட மண் சரிவு - 3 பேர் பரிதாப பலி...!
x

பண்டுவால் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் 3 கூலித் தொழிலாளிகள் உயிரிழந்து உள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பண்டுவால் பகுதியில் மண் சரிந்து வீட்டின் மீது விழுந்ததில் வீட்டில் இருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த 3 ரப்பர் தோட்ட கூலித் தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்து உள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்த தொழிலாளர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து போலீசார் கூறுகையில்,

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர், உத்தர கனடாவைச் சேர்ந்த 2 பேர் என்று மொத்தம் 5 பேர் பண்டுவால் பகுதியில் குடிசை அமைத்து தங்கி, அங்குள்ள ரப்பர்தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டடு அவர்கள் தங்கியிருந்த வீடு மண்ணுக்குள் புதைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மண்ணுக்குள் புதைந்திருந்த ஜாணி(வயது44) என்பவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மற்ற 3 பேரான பிஜு (45), சந்தோஷ்(46), பாபு(46) ஆகியோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பம் தொடர்பாக பண்டுவால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story