கர்நாடகா: ஒருவர் தேர்வு எழுத 12 பேர் பாதுகாப்பு..!


கர்நாடகா: ஒருவர் தேர்வு எழுத 12 பேர் பாதுகாப்பு..!
x
தினத்தந்தி 23 May 2022 7:45 AM GMT (Updated: 23 May 2022 7:17 AM GMT)

கர்நாடகாவில் நடைபெற்ற நடுநிலைபள்ளி பட்டதாரி ஆசிரியருக்கான தகுதித்தேர்வில் ஒருவர் மட்டும் பரிட்சை எழுத 12 பேர் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

கர்நாடகா:

கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுக்கான பரிட்சை நடந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை சுமார் ஆயிரத்து 166 பேர் பல்வேறு மையங்களில் கணிதம் ஆங்கிலம் அறிவியல் தேர்வு எழுதினார்கள்.

இந்த நிலையில் அங்குள்ள அரசு பட்டதாரி கல்லூரி வளாகத்தில் சமூக அறிவியல் பரிட்சை எழுதுவதற்காக சோமசேகர் என்கின்ற ஒருவர் மட்டும் நேற்று மாலை தயாராக இருந்தார்.

தேர்வு மையதில் அவர் ஒருவர் மட்டும் பரிட்சை எழுதும் பொழுது பாதுகாப்பு அதிகாரி, துணை அதிகாரி, போலீஸ்காரர்கள் மற்றும் கொரோனா சோதனையாளர்கள் உட்பட மொத்தம் 12 பேர் வரை அவருக்கு பாதுகாப்பளித்தனர்.

சுமார் மூன்று மணிநேரம் அவர் பரீட்சை எழுதிவிட்டு வெளியே வந்தார். ஒருவர் பரிட்சை எழுத 12 பேர் பணியாற்றியதை பார்த்து அவர் வெளியே வரும் பொழுது புன்னகைத்துக் கொண்டு வெளியே வந்தார். கண்டிப்பாக நான் பரிட்சையில் வெற்றி பெற்று எனக்கு அரசுப் பணி கிடைக்கும் எனவும் சோமசேகர் தெரிவித்தார்.


Related Tags :
Next Story