காஷ்மீர் என்கவுண்ட்டர்; பாகிஸ்தானிய பயங்கரவாதி சுட்டு கொலை


காஷ்மீர் என்கவுண்ட்டர்; பாகிஸ்தானிய பயங்கரவாதி சுட்டு கொலை
x

காஷ்மீர் என்கவுண்ட்டரில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடன் தொடர்புடைய பாகிஸ்தானிய பயங்கரவாதியை படையினர் சுட்டு கொன்றனர்.



ஜம்மு,



ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூரில் ஜலூரா பகுதிக்கு உட்பட்ட பானிபோரா வன பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

இதில், தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடன் தொடர்புடைய பாகிஸ்தானிய பயங்கரவாதியை சுட்டு கொன்றனர். இதில், ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. 2 வெளிநாட்டு பயங்கரவாதி மற்றும் ஒரு உள்ளூர் பயங்கரவாதி தப்பியுள்ளனர்.

தேடுதல் பணி தொடருகிறது. இதனை காஷ்மீர் மண்டல போலீசார் இன்று தெரிவித்து உள்ளனர். தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தளபதி நிசார் கந்தே பாதுகாப்பு படையினரால் நள்ளிரவில் நடந்த மோதலில் சுட்டு கொல்லப்பட்டார். இந்த தகவலை நேற்று முன்தினம் காஷ்மீர் காவல் துறை தெரிவித்தது.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்து ஏ.கே.-47 ரக துப்பாக்கி ஒன்று உள்பட ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த மோதலில் காயமடைந்த 3 போலீசார் மற்றும் பொதுமக்களில் ஒருவர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சைக்கு பின்பு அவர்கள் நலமுடன் உள்ளனர்.


Next Story