கேரளா படகு விபத்து சம்பவம்: படகு ஓட்டுநரிடம் உரிமம் இல்லை - காவல்துறை தகவல்
படகில் அதிக நபர்களை ஏற்றிச் சென்றதே விபத்திற்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் மலப்புரத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து, அதில் பயணம் செய்த 15 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் படகு உரிமையாளர் நாசர் மற்றும் படகு ஓட்டுநர் தினேஷன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் விபத்திற்குள்ளான படகை இயக்கிய உதவியாளர்கள் 3 பேரை கேரள போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இதனிடையே 22 பேர் பயணம் செய்ய வேண்டிய படகில் 37 பேரை ஏற்றிச் சென்றதே விபத்திற்கு காரணம் என்றும், படகு ஓட்டுநரிடம் உரிமம் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story