கேரள முதல்-மந்திரியின் கிறிஸ்துமஸ் விருந்து - கவர்னருக்கு அழைப்பு விடுக்கவில்லை
கேரளாவில் இன்று நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் விருந்தில் பங்கேற்க மாநில கவர்னருக்கு அழைப்பு விடுக்கவில்லை.
திருவனந்தபுரம்,
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில், திருவனந்தபுரத்தில் உள்ள சுற்றுலாத்துறைக்கு சொந்தமான மஸ்கட் விடுதியில் இன்று கிறிஸ்துமஸ் விருந்து நடைபெற உள்ளது. இந்த விருந்தில் பங்கேற்க, எதிர்க்கட்சிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் கேரள கவர்னர் ஆரீப் முகமது கானுக்கு இந்த விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை. கவர்னருக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட காரணங்களால் அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை என மாநில அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த 14-ந்தேதி கவர்னர் ஆரீப் முகமது கான் ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துமஸ் விருந்தை கேரள முதல்-மந்திரி, எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் நிராகரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story