கேரளா: பத்தனம்திட்டாவில் காய்ச்சல் பரவல் உறுதி - பன்றி இறைச்சி விற்பனைக்கு தடை


கேரளா: பத்தனம்திட்டாவில் காய்ச்சல் பரவல் உறுதி - பன்றி இறைச்சி விற்பனைக்கு தடை
x

பத்தனம்திட்டாவில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சீதாதோடு ஊராட்சியில் உள்ள பன்றி பண்ணையில் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பன்றிக்காய்ச்சல் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி காய்ச்சல் பரவல் உறுதி செய்யப்பட்ட பகுதியில் இருந்து ஒரு கி.மீ. சுற்றளவிற்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 கி.மீ. சுற்றளவில் பன்றிகளை கொண்டு செல்லவும், கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, அந்த பகுதிகளில் பன்றி இறைச்சி விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


1 More update

Next Story