முதல்-மந்திரி மீதான குற்றச்சாட்டை வாபஸ் பெறக்கோரி கொலை மிரட்டல் - ஸ்வப்னா சுரேஷ்


முதல்-மந்திரி மீதான குற்றச்சாட்டை வாபஸ் பெறக்கோரி கொலை மிரட்டல் - ஸ்வப்னா சுரேஷ்
x

கோப்புப்படம்

முதல்-மந்திரி மீதான குற்றச்சாட்டை வாபஸ் பெறக்கோரி கொலை மிரட்டல் விடுப்பதாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார்.

பெரும்பாவூர்,

கேரளாவை உலுக்கிய தங்கம் கடத்தல் வழக்கு கொச்சி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இங்கு விசாரணைக்கு ஆஜரான ஸ்வப்னா சுரேஷ் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதனைத்தொடர்ந்து வாக்குமூலத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகள், அரசியல் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு பேட்டி அளித்தார்.

இந்த பேட்டி கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து எதிர்கட்சிகள் முதல்-மந்திரி பினராயி விஜயன் பதவி விலகக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஸ்வப்னா சுரேஷ் கொடுத்த ரகசிய வாக்குமூலத்தின் நகலை பெறுவதற்காக அமலாக்கத்துறையினர் எர்ணாகுளம் மாவட்ட கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையில், கேரள முன்னாள் மந்திரி கே.டி.ஜலீல் திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு, ஸ்வப்னா சுரேஷ் எர்ணாகுளம் மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. காவல் துறையினர் மூலமாகவும் எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. என்னை ஷாஜி கிரண் என்ற ஒரு நபர் நேரில் சந்தித்து முதல்-மந்திரி மீதான குற்றச்சாட்டுக்களை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை வரும் என்று கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று கூறினார்.


Next Story