ஷவர்மா கடைகளுக்கு கடிவாளம் போட்ட கேரள அரசு...!


ஷவர்மா கடைகளுக்கு கடிவாளம் போட்ட கேரள அரசு...!
x

கேரளாவில் ஷவர்மா தயாரிப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் ஷவர்மாவை தயாரிக்க உரிமம் இல்லை என்றால் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஷவர்மா தயாரிப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதில், ஷவர்மா தயாரிக்க உரிமம் பெற தவறினால் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிப்பதுடன், 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஷவர்மாவை திறந்த சூழலில் தயாரிக்க கூடாது என்றும், 4 மணி நேரம் கழித்து ஷவர்மாவில் மீதமுள்ள இறைச்சியை பயன்படுத்த வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், பார்சலில் தேதியையும், பார்சல் வாங்கிய ஒரு மணி நேரத்திற்குள் அதை சாப்பிட வேண்டும் என்பதையும் துல்லியமாக குறிப்பிட வேண்டும் என வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.

சமையல் காரர்கள் உணவு பாதுகாப்பு பயிற்சி சான்றிதல் பெற்றிருக்க வேண்டும், அங்கீகரிக்கப்பட்ட சப்ளையர்களிடம் இருந்து மட்டுமே, சமையல் பொருட்களை வாங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Next Story