கேரள அரசு நிறுவன மேலாண்மை இயக்குனர் பதவி விலக ஐகோர்ட்டு உத்தரவு


கேரள அரசு நிறுவன மேலாண்மை இயக்குனர் பதவி விலக ஐகோர்ட்டு உத்தரவு
x

கேரள அரசு நிறுவன மேலாண்மை இயக்குனர், பதவிக்கு தகுதி இல்லாதவர் என கண்டறிந்த கேரள ஐகோர்ட்டு அவரை உடனே பதவி விலகுமாறு உத்தரவிட்டது.

திருவனந்தபுரம்,

கேரள அரசு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர், பதவிக்கு தகுதி இல்லாதவர் என கண்டறிந்த கேரள ஐகோர்ட்டு அவரை உடனே பதவி விலகுமாறு உத்தரவிட்டது.

கேரள மாநில அரசின் கீழ் அம்மாநில அளவிலான கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் மேலாண்மை இயக்குனராக சனில் என்பவர் நியமிக்கப்பட்டார். அவரது நியமனம் முறைகேடானது என குற்றஞ்சாட்டி, வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, சனில் அந்த பதவிக்கு தகுதியானவர் அல்ல என்பதை கண்டறிந்ததை தொடர்ந்து அவர் பதவி விலகுமாறு உத்தரவிட்டது.


Next Story