ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து விபத்து ; வாலிபர் உயிர் தப்பினார்


ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து விபத்து ; வாலிபர் உயிர் தப்பினார்
x

கேரளாவில் மீண்டும் செல்போன் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட கேரள மாநிலத்தில் தந்தையின் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டு இருந்தபோது செல்போன் வெடித்ததில் 8-வயது சிறுமி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை அளித்தது.

அதேபோல், சென்னை வண்ணாரப்பேட்டையில் செல்போனில் சார்ஜ் செய்து கொண்டே பேசிய இளைஞர் மின்சாரம் தாக்கி கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார்.

இந்த நிலையில், கேரளாவில் மீண்டும் செல்போன் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இது குறித்த விவரம் வருமாறு:-

கேரளாவில் ரயில்வே ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் ஹரிஸ் ரகுமான் (வயது 23) வழக்கம் போல் கோழிக்கோட்டில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்று இருக்கிறார். அப்போது, திடீரென தனது ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியுள்ளது.

இதனால், ஜீன்சிலும் தீ பிடித்தது. உடனடியாக தீயை ஹரிஷ் ரகுமான் அணைத்து விட்டார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அவருக்கு லேசான தீக்காயங்கள் மட்டுமே ஏற்பட்டது. திடீரென வெடித்து சிதறிய செல்போன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டது என்று ரகுமான் தெரிவித்தார்.

அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ரகுமான், முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


Next Story