கேரளா: பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.எல்.ஏ. சஸ்பெண்டு; காங்கிரஸ் நடவடிக்கை


கேரளா:  பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.எல்.ஏ. சஸ்பெண்டு; காங்கிரஸ் நடவடிக்கை
x

கேரளாவில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.எல்.ஏ.வை 6 மாதங்களுக்கு கட்சி நடவடிக்கைகளில் இருந்து காங்கிரஸ் சஸ்பெண்டு செய்துள்ளது.



திருவனந்தபுரம்,


கேரளாவில் பெரும்பாவூர் தொகுதி காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எல்தவுஸ் குன்னப்பிள்ளி. இவர் மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

இந்த வழக்கில் கோர்ட்டு அவருக்கு முன்ஜாமீன் வழங்கி நேற்று முன்தினம் உத்தரவிட்டது. எனினும், விசாரணைக்காக நேற்று அவர் விசாரணை குழு முன் ஆஜரானார்.

இந்த நிலையில், கேரள பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே. சுதாகரன் வெளியிட்டு உள்ள செய்தியில், எம்.எல்.ஏ. எல்தவுஸ் அளித்த விளக்கங்களை கட்சி தலைமை ஆய்வு செய்தது. அதில் திருப்தி ஏற்படவில்லை.

அவர், தொகுதியில் சட்டசபை உறுப்பினராக பணியாற்ற வேண்டியதன் அவசியம் உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு கோர்ட்டு அவருக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

இதனை கவனத்தில் கொண்டு, காங்கிரஸ் கமிட்டியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் தினசரி விவகாரங்களில் இருந்து 6 மாத காலத்திற்கு கட்சி அவரை சஸ்பெண்டு செய்கிறது. இந்த கால கட்டத்தில் அவரது செயல்பாடுகளை கட்சி உற்றுநோக்கும். அதன்பின்னரே, அடுத்த கட்ட முடிவு மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.


Next Story