கேரளாவில் அமீபா மூலம் ஏற்படும் அரியவகை மூளை நோய்க்கு 15-வயது சிறுவன் பலி


கேரளாவில் அமீபா மூலம் ஏற்படும் அரியவகை மூளை நோய்க்கு 15-வயது சிறுவன் பலி
x

கேரளாவில் அமீபா மூலம் அரியவகை மூளை நோய் பரவுவதாக சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

ஆலப்புழா,

ஆலப்புழா மாவட்டம் பனவல்லியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்ற அரியவகை மூளை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இந்த நோய் அமீபா மூலம் பரவுகிறது. நாசித்துவாரங்கள் மூலம் மனித உடலுக்குள் நுழையும் இந்த அமீபா மூளையை சென்று தாக்குகிறது.

இது முதன்முதலாக 2016-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆராய்ச்சியில் அசுத்தமான நீரில் குளிப்பதனாலேயே இந்நோய் பரவுவதாக தெரியவந்துள்ளது. மொத்தம் 5 பேரை தாக்கியுள்ளது. அனைவரும் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நோயின் முக்கிய அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் செரிசுராஸ் ஆகும்.

இதுகுறித்து பேசிய கேரள சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ், அசுத்தமான நீரில் வாழும் அமீபா மூலம் பரவும் அரியவகை மூளை நோயால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவன் உயிரிழந்ததாக தெரிவித்தார். மேலும் அசுத்தமான நீரில் குளிப்பதை தவிர்க்கும்படியும் மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

1 More update

Next Story