போலீஸ் சொன்ன அந்த வாக்குறுதி.. தற்கொலை முடிவை கைவிட்டு பாலத்தில் இருந்து இறங்கிய நபர்


போலீஸ் சொன்ன அந்த வாக்குறுதி.. தற்கொலை முடிவை கைவிட்டு பாலத்தில் இருந்து இறங்கிய நபர்
x

கடும் மன உளைச்சல் மற்றும் நிதி நெருக்கடியில் இருப்பதால் தற்கொலை செய்யப்போவதாக போலீசாரிடம் அந்த நபர் கூறியிருக்கிறார்.

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவின் பார்க் சர்க்கஸ் பகுதியில் உள்ள இரும்பு பாலத்தில் கடந்த திங்கட்கிழமையன்று சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் விறுவிறுவென ஏறினார். அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், பேரிடர் மேலாண்மைக் குழுவினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்கொலை செய்ய வேண்டாம், உங்களுக்கு நாங்கள் உதவுகிறோம் என்று கூறி சமாதானம் செய்தனர். அப்போது அவர் கடும் மன உளைச்சல் மற்றும் நிதி நெருக்கடியில் இருப்பதால் தற்கொலை செய்யப்போவதாக கூறியிருக்கிறார்.

அவரை சமாதானம் செய்த போலீஸ் அதிகாரிகள், உங்களுக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்கிறோம், சாப்பிட பிரியாணியும் வாங்கி வைத்திருக்கிறோம் என்று கூறினர். இதனால் சமாதானம் அடைந்த அந்த நபர், தற்கொலை எண்ணத்தை கைவிட்டு பாலத்தில் இருந்து கீழே இறங்கினார்.

விசாரணையில் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றதாலும், தொழிலில் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டதாலும் மன உளைச்சலில் இருந்தது தெரியவந்தது.


Next Story