ஆதிரா மரண வழக்கு : புகைப்படம் வெளியிட்டவர் தற்கொலை...!
ஆதிரா தற்கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அருண் வித்யாதரன் தற்கொலை செய்து கொண்டார்.
கோட்டயம்:
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் ஆதிரா(26). கொத்தாநல்லூரை சேர்ந்த அருண் வித்யாதரனும் ஆதிராவும் காதலித்து வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆதிரா அருண் வித்யாதரனின் பழக்கவழக்கம் பிடிக்காததால் அவரை விட்டு விலகினார்.
இதை தொடர்ந்து ஆதிரா வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.ஆதிராவை கடந்த ஞாயிற்றுக்கிழமை பெண் பார்க்கவருவதாக இருந்தது. இந்த நிலையில் ஆதிராவுடன் அருண் இருக்கும் ஆபாச புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி மோசமாக சித்தரிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ஆதிரா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆபாச புகைபடங்களை வெளியிட்ட அருண் வித்யாதரனை போலீசார் தேடி வந்தனர்.
40 பேர் கொண்ட போலீஸ் தனிப்படை குழு நான்கு நாட்களாக விசாரணை நடத்தியும் அருண் வித்யாதரனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், போலீசார் லுக் அவுட் நோட்டீசை வெளியிட்டனர்.
இந்த நிலையில் தாடபட்டௌ வந்த அருண் வித்யாதரன் (32) காசர்கோடு வடக்கு கோட்டச்சேரியில் உள்ள லாட்ஜ் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
ராஜேஷ்குமார் என்ற பெயரில் லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார்.அருண் கடந்த 2ம் தேதி லாட்ஜில் அறை எடுத்துள்ளார். சாப்பிட மட்டும் வெளியே சென்று வந்து உள்லார்.நேற்றிரவு அருண் குடிபோதையில் இருந்ததாக லாட்ஜ் ஊழியர்கள் தெரிவித்தனர். இன்று காலை அவர் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.