கே.ஆர்.எஸ். அணையில் தண்ணீர் குறைவாக உள்ளதால் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடுவது கடினம் - கர்நாடக வேளாண் துறை மந்திரி


கே.ஆர்.எஸ். அணையில் தண்ணீர் குறைவாக உள்ளதால் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடுவது கடினம் - கர்நாடக வேளாண் துறை மந்திரி
x

கே.ஆர்.எஸ். அணையில் 15.34 டி.எம்.சி. நீர் மட்டுமே உள்ளதால் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது கடினம் என்று கர்நாடக விவசாய துறை மந்திரி செலுவராயசாமி கூறினார்.

கர்நாடக வேளாண் துறை மந்திரி செலுவராயசாமி நேற்று மண்டியாவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணையில் நேற்று நிலவரப்படி 15.34 டி.எம்.சி. தண்ணீரே உள்ளது. இந்த தண்ணீரைக் கொண்டு அடுத்த ஓரிரு மாதங்களுக்கு மக்களுக்கு குடிநீர் மட்டுமே வழங்க முடியும். விவசாயத்துக்கு கூட திறந்துவிட முடியாது. இந்த நிலையில் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீரை திறந்து விடுவது என்பது கடினம்.

இருப்பினும் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது குறித்து முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் நீர்ப்பாசன துறை மந்திரியும், துணை முதல்-மந்திரியுமான டி.கே.சிவக்குமார் ஆகியோருடன் பேசி ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசிடம்...

இதுபற்றி மண்டியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுமலதா அம்பரீஷ் கூறுகையில், 'தற்போதைக்கு காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது கஷ்டம் தான். தீர்ப்பாயம் அறிவித்த நீர் பங்கீட்டில் பல விதிகள் உள்ளன. இதுபற்றி மாநில மந்திரியிடம் ஆலோசனை நடத்தி, மத்திய அரசிடம் தெரியப்படுத்துவேன். மேலும் கோர்ட்டிலும் இங்குள்ள சூழ்நிலை குறித்து நம்ப வைக்க பாடுபடுவேன்' என்றார்.


Next Story