கேரளாவில் தொடர் கனமழையால் நிலச்சரிவு: வீடு மண்ணில் புதைந்து ஒருவர் பலி - 4 பேரை தேடும் பணி தீவிரம்


கேரளாவில் தொடர் கனமழையால் நிலச்சரிவு: வீடு மண்ணில் புதைந்து ஒருவர் பலி - 4 பேரை தேடும் பணி தீவிரம்
x

கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், மலையோர கிராமங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மலை கிராமங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் எனவும் இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குடையாத்தூர் என்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் அப்பகுதியில் உள்ள ஒரு வீடு முற்றிலும் மண்ணில் புதைந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புபடையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய 4 பேரை தேடும் பணியில் மீட்புபடையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story