கனவுகளை நிறைவேற்ற மொழி தடையாக இருக்கக்கூடாது... பிரதமர் மோடி


கனவுகளை நிறைவேற்ற மொழி தடையாக இருக்கக்கூடாது... பிரதமர் மோடி
x
தினத்தந்தி 15 April 2023 10:29 AM GMT (Updated: 15 April 2023 10:30 AM GMT)

சி.ஏ.பி.எப். தேர்வு தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் என்ற அறிவிப்பு தொடர்பாக பிரதமர் மோடி டுவீட் செய்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆயுதப் படைகளில் ஆட்களை சேர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சி.ஏ.பி.எப். (CAPF) தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

அடுத்ததாக நாடு முழுவதும் வரும் 2024 ஜனவரி 1-ந்தேதி சி.ஏ.பி.எப். தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட 15 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி தன்னுடைய டுவீட்டரில், கனவுகளை நிறைவேற்ற மொழி தடையாக இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

ஒருவரின் கனவுகளை நிறைவேற்றுவதில் மொழி ஒரு தடையாகக் கருதப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான எங்களின் பல்வேறு முயற்சிகளின் இது ஒரு பகுதி என பிரதமர் தெரிவித்துள்ளார்.


Next Story