கர்நாடகா பட்ஜெட் கூட்டத் தொடர்... காதில் பூவுடன் வந்த சித்தராமையா
சித்தராமையா மட்டுமின்றி காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் காதில் பூவுடன் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.
பெங்களூரு,
கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அம்மாநில எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையா காதில் பூவுடன் சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். மேலும், சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் காதில் பூ வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
2018 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கர்நாடக மாநிலத்தில் உள்ள 7 கோடி மக்களை பா.ஜ.க. அரசு ஏமாற்றிவிட்டதாக குற்றச்சாட்டு எழுப்பியதுடன், கர்நாடக அரசின் பட்ஜெட் போலியானது என்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் விமர்சித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story