திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்


திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்
x

கோப்புப்படம்

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.

திருப்பதி,

திருமலை திருப்பதி முதலாவது மலைப்பாதையில் நேற்று மாலை 5 மணியளவில் பக்தர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையோரம் அடர்ந்த காட்டில் முட்புதரில் சிறுத்தை ஒன்று பதுங்கியபடி உறுமி கொண்டிருந்த சத்தத்தைக் கேட்டு அலறியடித்து ஓடினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும் சிறுத்தை அங்கிருந்து காட்டுக்குள் தப்பியோடி விட்டது. திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.

1 More update

Next Story