கர்நாடகத்தில் புத்தாண்டுக்கு ரூ.181 கோடிக்கு மதுபானம் விற்பனை


கர்நாடகத்தில் புத்தாண்டுக்கு ரூ.181 கோடிக்கு மதுபானம் விற்பனை
x

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் புத்தாண்டுக்கு ரூ.181கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 9 நாட்களில் மது விற்பனையால் கலால் துறைக்கு ரூ.657 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

பெங்களூரு:

மது விற்பனை அமோகம்

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புத்தாண்டை மதுபானம் அருந்தி இளைஞர்கள் கொண்டாடினார்கள். மதுக்கடைகள், மதுபான விடுதிகள், பப்களில் நேற்று முன்தினம் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த நிலையில், புத்தாண்டுக்கு (நேற்று முன்தினம்) பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 5.41 லட்சம் லிட்டர் மதுபானம் விற்பனை ஆகி இருப்பதாக கலால்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதாவது மதுபானம் 3 லட்சம் லிட்டரும், 2.41 லட்சம் லிட்டர் பீரும் விற்பனை ஆகி இருந்தது. ஒரே நாளில் ரூ.181 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கலால்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநிலம் முழுவதும் கடந்த 9 நாட்களாக மதுபானம் அமோக விற்பனை ஆகி இருந்ததும் தெரியவந்துள்ளது.

ரூ.657 கோடி வருவாய்

அதன்படி, கடந்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி 3.57 லட்சம் லிட்டர் மதுவும், 2.41 லட்சம் லிட்டர் பீரும் விற்பனை ஆகி இருந்தது. 28-ந் தேதி 2.31 லட்சம் லிட்டர் மதுவும், 1.67 லட்சம் லிட்டர் பீரும் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. 29-ந் தேதி 2.31 லட்சம் மதுவும், 1.93 லட்சம் லிட்டர் பீரும் விற்பனை ஆகி இருந்தது. 30-ந் தேதி 2.93 லட்சம் லிட்டர் மதுவும், 2.59 லட்சம் லிட்டர் பீரும் விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

ஒட்டு மொத்தமாக கடந்த மாதம் 23-ந் தேதியில் இருந்து 31-ந் தேதி வரை மாநிலத்தில் 20.66 லட்சம் லிட்டர் மதுவும், 15.64 லிட்டர் பீர் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கலால்துறையினர் தெரிவித்துள்ளனர். அதாவது கடந்த 9 நாட்களில் ரூ.1,262 கோடிக்கு மதுபான விற்பனை நடந்திருந்தது. இதன்மூலம் கடந்த 9 நாட்களில் மட்டும் கலால்துறைக்கு ரூ.657 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் கூறினார்கள்.


Next Story