புதுச்சேரி, காரைக்காலில் மதுபான கடைகள் இரவு 11 மணிவரை திறந்திருக்க அனுமதி


புதுச்சேரி, காரைக்காலில் மதுபான கடைகள் இரவு 11 மணிவரை திறந்திருக்க அனுமதி
x

கோப்புப்படம்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மதுபான கடைகளை இரவு 11 மணி வரை திறந்திருக்க கலால்துறை அனுமதி வழங்கியுள்ளது.

புதுச்சேரி,

புதுவையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மதுக்கடைகள் இரவு 10 மணிக்கே மூட தேர்தல்துறை உத்தரவிட்டது. தற்போது வாக்குப்பதிவு முடிந்தநிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்ந்துள்ளது.

வழக்கமாக தேர்தலுக்கு முன்பு மதுபான கடைகள் இரவு 11 மணிவரை செயல்பட்டன. சுற்றுலா உரிமம் பெற்ற மதுபார்கள் இரவு 12 மணிவரை செயல்பட்டு வந்தன. வாக்குப்பதிவு முடிந்த நிலையிலும் தற்போது வரை மதுபான கடைகள் இரவு 10 மணியோடு மூடப்பட்டு வந்தது.

எனவே அதனை இரவு 11 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கலால்துறை சார்பில் தேர்தல் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் புதுவை, காரைக்கால் பகுதிகளில் உள்ள மதுபான கடைகள் இரவு 11 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் பிறப்பித்துள்ளார்.

1 More update

Next Story