அடுக்குமாடி குடியிருப்பில் கள்ளக்காதல் ஜோடி தீக்குளித்து தற்கொலை... 3 நாளில் முடிந்த லிவ்-இன் வாழ்க்கை


அடுக்குமாடி குடியிருப்பில் கள்ளக்காதல் ஜோடி தீக்குளித்து தற்கொலை... 3 நாளில் முடிந்த லிவ்-இன் வாழ்க்கை
x

கள்ளக்காதல் குறித்து அறிந்த சோனு தாசின் கணவர் சண்டை போட்டதால் இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் கோத்தனூரில் நர்சிங் ஏஜென்சி நடத்தி வந்தவர் அபில் ஆபிரகாம் (வயது 29). இவரது சொந்த மாநிலம் கேரளா ஆகும். இவரது நர்சிங் ஏஜென்சியில் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த சோமினி தாஸ் (வயது 20) என்ற பெண் பகுதிநேர வேலைக்கு சேர்ந்தார். சோமினி தாஸ் தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டே வேலை பார்த்துள்ளார்.

சோமினி தாஸ்-க்கு திருமணமாகிவிட்டது. எனினும் அபில் ஆபிரகாமை சந்தித்தபின், அவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. சில மாதங்களாக காதலித்த அவர்கள், சேர்ந்து வாழ முடிவு செய்து தோட்டகுப்பி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு பார்த்து குடியேறினர். அங்கு 3 நாட்கள் மட்டுமே வாழ்ந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர்.

இதுதொடர்பாக கோத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் குறித்து அறிந்த சோனு தாசின் கணவர் சண்டை போட்டதால் இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

சோனு தாசுக்கும் அவரது கணவருக்கும் ஏற்கனவே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. விரைவில் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற சோனு தாஸ் விரும்பியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story