ஜீப் மீது சொகுசு கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக வந்த அந்த கார் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த ஜீப் மீது மோதி விபத்துக்குள்ளானது.
பைரோசாபாத்,
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்ள டெல்லியை சேர்ந்த குடும்பம் ஒன்று 'ஜீப்'பில் புறப்பட்டு சென்றது. விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்ப லக்னோ-ஆக்ரா விரைவுச்சாலையில் திரும்பி வந்தபோது, ஓய்வு எடுக்க வசதியாக நசீர்பூர் அருகே சாலையில் அந்த ஜீப் ஓரங்கட்டப்பட்டது.
இந்தநிலையில் அந்தச்சாலையில் சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்தது. கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக வந்த அந்த கார் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த ஜீப் மீது மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் அந்த ஜீப் சாலையில் உருண்டு கவிழ்ந்தது. அப்பளம் போல் நொறுங்கிய அந்த ஜீப்பில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது.
Related Tags :
Next Story