இந்தியாவில் கும்பல் தாக்குதல் நடத்துபவர்கள் கொண்டாடப்படுகின்றனர் - மெகபூபா முப்தி


இந்தியாவில் கும்பல் தாக்குதல் நடத்துபவர்கள் கொண்டாடப்படுகின்றனர் - மெகபூபா முப்தி
x

இந்தியாவில் கும்பல் தாக்குதல் நடத்துபவர்கள் மாலை அணிவித்து கொண்டாடப்படுகின்றனர் என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி ஸ்ரீநகரில் இன்று நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய மெகபூபா, பாகிஸ்தானில் ஒரு நபர் கும்பல் தாக்குதலால் அடித்துகொல்லப்பட்டார். இந்த கும்பல் தாக்குதல் தொடர்பாக 6 பேருக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் அந்நாட்டு நீதித்துறை விதித்துள்ளது. 2015-ம் ஆண்டுக்கு பின் இந்தியாவில் பல 'அக்லக்'குகள் கும்பல் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவில் கும்பல் தாக்குதல் நடத்துபவர்கள் மாலை அணிவித்து கொண்டாடப்படுகின்றனரே தவிர தண்டிக்கப்படுவதில்லை. இது தான் பாகிஸ்தான் நீதித்துறைக்கும், இந்த (இந்திய) நீதித்துறைக்கும் உள்ள வித்தியாசம்' என்றார்.

2015-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் தாத்ரியில் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பெயரில் முகமது அக்லக் கும்பலால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story