மத்திய பிரதேசத்தில் ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு


மத்திய பிரதேசத்தில் ஒரு வாக்குச்சாவடியில்  மறுவாக்குப்பதிவு
x
தினத்தந்தி 21 Nov 2023 4:04 AM GMT (Updated: 21 Nov 2023 4:36 AM GMT)

இந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

போபால்,

மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் கடந்த 17-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்குள்ள அடர் தொகுதிக்கு உட்பட்ட கிஷுபுராவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி ஒன்றில், சிலர் ஓட்டுப்போடுவதை வீடியோ பதிவு செய்து வெளியிட்டனர். இது தேர்தல் நடைமுறைக்கு எதிரானது. எனவே இந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

இந்தநிலையில் , கிஷுபுராவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடைப்பெற்று வருகின்றது. ஓட்டுப்போடும் அனைவருக்கும் நடு விரலில் மை வைக்கப்படுகின்றது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


Next Story